வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2023 (11:22 IST)

மயிலாப்பூரில் லஸ் கார்னர் சாலையை மூட திட்டம்: என்ன காரணம்?

road1
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வரும் நிலையில் மயிலாப்பூர் லஸ்கார்னர் சாலையை மூட  திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.  

சென்னையில் 116 கிலோ மீட்டர் தொலைவில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை போடப்பட்டு வரும் இந்த மெட்ரோ ரயில் பாதைக்காக பல போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது

இந்த நிலையில் கலங்கரை விளக்கத்திலிருந்து  மயிலாப்பூர் மந்தைவெளி வழியாக சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருவதால் தரைக்கு அடிகள் கேபிள் பணிக்கும் பதிக்கும் பணிகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்க  மயிலாப்பூர்  லஸ் கார்னர் சாலையை மூட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன  

இதனால் லஸ் கார்னர் வழியாக செல்லும் வாகனங்கள் சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.  மயிலாப்பூரில் சாலையை மூடிய பின்னர் எந்தெந்த பாதையில் வாகனங்கள் செல்ல வேண்டும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva