போராட்டம் குறித்த எனது கருத்து தவறாக சித்தரிக்கப்படுகிறது; ரஜினி வேதனை

Rajinikanth
Last Updated: செவ்வாய், 5 ஜூன் 2018 (17:04 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நான் பேசிய விவகாரம் தவறாக சித்தரிக்கப்படுகிறது என்று ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

 
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த் கூறியதாவது:-
 
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக நான் பேசிய விவகாரம் தவறாக சித்தரிக்கப்படுகிறது. நான் பேசியதை இணையதளங்களில் பார்க்க முடியும். அதைத் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. 
 
காலா படத்திற்கு எதிர்ப்புகள் இன்னும் குறைவா இருக்கேனு நான் பார்த்துகிட்டு இருக்கேன். இதைவிட அதிகமாக இருக்கும் என்று நினைத்தேன். காலா படத்திற்கு ஒரு பிரச்சனையும் வராது என்று எதிர்பார்க்கிறேன். நமது தமிழக மக்கள் மட்டுமல்ல பல லட்சம் பிறமொழி மக்களும் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர். 
 
எனவே கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட உறுதியான நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.
 


இதில் மேலும் படிக்கவும் :