1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 17 டிசம்பர் 2016 (17:02 IST)

மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறது எங்கள் குடும்பம்: சசிகலா கணவர் வேதனை!

மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறது எங்கள் குடும்பம்: சசிகலா கணவர் வேதனை!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி காலமானார். இதனையடுத்து பல்வேறு வகைகளில் சசிகலா மீதும் அவரது குடும்பத்தினர் மீது சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் வருகிறது. இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசிகலாவின் கணவர் நடராஜன் தங்கள் குடும்பம் மன உளைச்சலில் இருப்பதாக கூறினார்.


 
 
ஆரம்பத்தில் ஜெயலலிதா உடன் இருந்த நடராஜன் பின்னர் ஜெயலலிதாவால் தூக்கி எரியப்பட்டார். கடைசி வரை அவரை கட்சியிலும் சரி போயஸ் கார்டனிலும் சரி சேர்க்கவே இல்லை ஜெயலலிதா. இந்நிலையில் ஜெயலலிதா இறந்ததையடுத்து நடராஜன் மீண்டும் அதிமுக வட்டாரத்திலும் போயஸ் கார்டனிலும் வலம் வந்தார்.
 
இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனின் மகன் பழனிகுமணனுக்கு பொருளாதாரத்தில் சிறந்த கட்டுரைகளை எழுதியதற்காக அந்நாட்டின் புலிட்சர் விருது வழங்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு மதுரையில் நேற்று பாராட்டு விழ நடைபெற்றது.
 
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சசிகலாவின் கணவர் நடராஜன், தமிழ்நாட்டு மக்களே மிக சோகத்தில் இருக்கும் நிலையில் அதை தாங்கி நானும் என் குடும்பமும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும் நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்கிறேன் என்றார்.
 
மேலும் எங்கும் செல்ல முடியாத நிலையிலும் இந்த விழாவுக்கு வருகிறேன் என்றால், தமிழனுக்கு கிடைத்த விருது என்பதால் அதனை சிறப்பிப்பதற்காக கலந்து கொண்டேன் என்றார் நடராஜன்.