ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 4 ஜூலை 2016 (09:16 IST)

எனது வீட்டிலும் சுவாதி கொலையை பற்றி பேசினார்கள்: ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதியை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பியோடிய ராம்குமார் கடந்த 2-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற அவர் மருத்துவமனையில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.


 
 
அதில், சுவாதி இறந்த செய்தியை தொலைக்காட்சி மூலமாகவே தெரிந்து கொண்டதாகவும், இங்கிருந்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றதாக கூறினார்.
 
மேலும், திடீரென நான் வீட்டுக்கு சென்றதும் வீட்டில் உள்ளவர்கள் ஏன் வந்தாய் என கேட்டார்கள். உடம்பு சரியில்லை என கூறியதால் எதுவும் சொல்லவில்லை. சுவாதியை கொலை செய்துவிட்டு வீடுக்கு சென்றதும் முதலில் பதற்றமாக இருந்தது.
 
எனது வீட்டில் உள்ளவர்களும் சுவாதி கொலை பற்றி பேசினார்கள், நானும் அவர்களுடன் சகஜமாக பேசினேன் என ராம்குமார் தனது வாக்குமூலத்தில் கூறியதாக தகவல்கள் வருகிறது.