1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MP Kathir Anand Appears Again at Enforcement Directorate Office

அமலாக்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் ஆஜரான கதிர் ஆனந்த் எம்பி..

அமலாக்கத்துறை
திமுக எம்பி கதிர் ஆனந்த் அவர்களுடைய வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோதனை செய்த நிலையில் சமீபத்தில் அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது. இதனை அடுத்து அவர் ஆஜர் ஆனார் என்று செய்திகள் வெளியாகின.
 
இந்த நிலையில் இன்று மீண்டும் அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அமைச்சர் துரைமுருகன் மகன் மற்றும் திமுக எம்பி கதிர் ஆனந்த் அவர்களுக்கு சொந்தமான கல்லூரியில் கடந்த 21ஆம் தேதி சோதனை நடந்தது.
 
இந்த சோதனையில் கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள், கல்லூரி லாக்கரில் இருந்த ரூ.75 லட்சம் மற்றும் பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்ததாக கூறப்பட்டது.
 
இது குறித்து அவர் ஜனவரி 22ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் இன்று மீண்டும் அவர் ஆஜராகி உள்ளார். மேலும் சில ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு அவர் இன்று பதில் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!