வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 1 ஜூலை 2014 (16:47 IST)

இடிபாடுகளில் சிக்கியவர்கள் 15 நாட்கள் உயிரோடு இருக்கலாம் - மருத்துவ கல்வி இயக்குனர்

போரூர் மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில் இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்கள். இதுவரை 28 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
 
இடிந்து விழுந்த கான்கிரீட் தூண்கள், சிலாப்கள், மேற்கூரைகளுக்கு அடியில் உயிருடன் இருப்பவர்களை மீட்க மீட்பு குழுவினரும், டாக்டர்கள் குழுவினரும் போராடி வருகிறார்கள். மீட்புபணி 4வது நாளாக நடந்து வரும் நிலையில் உயிரோடு இருக்கும் தொழிலாளர்களை மீட்க சாதுர்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
சம்பவம் நடந்து 72 மணி நேரம் (3 நாட்கள்) முடிந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் தொழிலாளர்கள் உயிருடன் இருப்பார்களா? அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறதா? என்பது குறித்து மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமியிடம் கேட்டதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:–
 
ஒரு மனிதன் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல், ஆகாரம் உட்கொள்ளாமல் 15 நாட்கள் வரை உயிரோடு இருக்கலாம். அவரது உடல் வலிமை, மன தைரியத்தை பொறுத்து இது அமைநதுள்ளது.
 
எதுவும் சாப்பிடாமல் ஒரு வாரம் வரை கட்டாயம் இருக்க முடியும். அதற்கு மேலாக அவரது சிறுநீரகம் பாதிக்கக்கூடும். சிறுநீரகம் பாதித்தாலும் அவர் உயிருடன் இருக்க முடியும். உடலில் நீர்சத்து குறைந்து விடுவதால் மயக்கமான நிலையில் காணப்படுவார்.
 
அந்த அடிப்படையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் ஊழியர்களை உயிரோடு மீட்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதியாக உள்ளார்.
 
அதனால் மீட்பு பணியில் விவேகமாக செயல்பட வேண்டியுள்ளது. இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி இருப்பவர்கள் மீது கான்கிரீட் துண்டுகள் விழுந்து அழுக்கி விடக்கூடாது என்பதற்காக மீட்பு பணிகள் நிதானமாக நடக்கின்றன.
 
இடிபாடுகளில் இருந்து மீட்கப்படுபவர்களுக்கு உடனடியாக காற்று குழாய் டியூப் மூலம் முதலுதவி அளிக்கப்படுகிறது. இருதயத்தை அமுக்கி அதன் செயலாக்கி டாக்டர்கள் உறுதி செய்தனர்.
 
இவ்வாறு டாக்டர் கீதாலட்சுமி கூறினார்.