பால் கொடுக்கும் போது வலி ; குழந்தையை கொன்ற தாய் : அதிர்ச்சி செய்தி

Last Updated: ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (18:43 IST)
பெற்ற தாயே குழந்தையை கொன்று விட்டு காணாமல் போய்விட்டதாக போலீசாரிடம் புகார் அளித்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை வேளச்சேரி பகுதியில் வசித்து வருபவர் வெங்கண்ணா. இவரின் மனைவி உமா. இவர்களின் சொந்த ஊர் ஆந்திர  மாநிலம் ஆகும். இந்த தம்பதிக்கு கடந்த 35 நாட்களுக்கு முன்பு ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. 
 
இந்நிலையில், நேற்று வீட்டில் கதவை திறந்து கொண்டு தூங்கியபோது, தனது குழந்தையை யாரோ கடத்தி சென்றுவிட்டனர் என உமாவும், அவரின் கணவரும் போலீசாரிடம் புகார் அளித்தனர். எனவே, இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர். 
 
ஆனால், குழந்தை காணாமல் போயும் கூட முகத்தில் எந்த சோகமும் இல்லாமல் இருந்து உமாவின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்த போது, பால் கொடுக்கும் போது ஏற்படும் வலியை தாங்கிக்கொள்ள முடியாததால், குழந்தையை கொன்றுவிட்டேன் என அவர் கொடுத்த வாக்குமூலம் போலீசாருக்கும், அவரின் கணவர் வெங்கண்ணாவிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின், ஓரிடத்தில் வீசப்பட்ட குழந்தையின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
உமாவையும் கைது செய்தனர். பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த விவகாரம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :