1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 10 மே 2020 (09:56 IST)

இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா: திருவள்ளூரில் பரபரப்பு

tiruvallur corona
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோயம்பேடு தொடர்பால் கொரோனா நோயின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்களில் கோயம்பேடு தொடர்பால் ஏற்பட்ட பாதிப்பு மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் கோயம்பேடு தொடர்பால் திருவள்ளூரில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கோயம்பேடு சென்று வந்த நபர்களால் திருவள்ளூரில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதித்து இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றுவரை 290 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்றும் 200க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளதால் இம்மாவட்டத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 தாண்டும் என அஞ்சப்படுகிறது. இருப்பினும் இது குறித்த சரியான எண்ணிக்கை குறித்த தகவல் இன்று மாலை வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. கோயம்பேடு தொடர்பால் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது