1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 15 ஜூன் 2022 (13:21 IST)

ரத்தம் தேவையா? உதவி எண்ணை அறிவித்தார் கமல்!

ரத்தம் தேவைப்படுவோர் அணுக உதவி எண்ணை அறிவித்தார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். 

 
இது குறித்து ஒரு அறிக்கையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... எனது ரசிகர் மன்றங்கள், நற்பணி இயக்கங்களாக மாற்றப்பட்ட நாள்தொட்டு இன்று வரை நற்பணி இயக்க நண்பர்கள் ரத்த தானம் வழங்கி வருகிறார்கள். குறிப்பாக கடந்த 4 தசாப்தங்களில் பல்லாயிரக்கணக்கான லிட்டர் ரத்தம் தானமாக வழங்கி எண்ணற்ற உயிர்களை காத்துள்ளனர். 
 
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்க நண்பர்களை தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணைந்து, உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் ’Kamal's Blood Commune' உருவாக்கியுள்ளோம். தமிழில் ’கமல் குதிக்கொடை குழு’. 
 
இதன் மூலம் ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்கத்தினர் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். 9150208889 எனும் பிரத்யேக எண்ணுக்கு அழைத்தால் அந்த பகுதிகளில் இருக்கும் எங்கள் கொடையாளிகள் மூலம் ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு துரிதமாக உதவ முடிமும். ரத்த தானம் செய்ய விரும்பும் சமூக சேவகர்களும் இந்த எண்ணை அழைத்து தங்களை பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.