திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 28 டிசம்பர் 2020 (17:25 IST)

மக்கள் நீதி மய்யமும் திராவிடக் கட்சிதான் - கமல்ஹாசன்

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளே ஆட்சி செய்துவரும் நிலையில் திராவிட கட்சிகளை தமிழகத்திலிருந்து விரட்டுவோம் என பாஜக உள்பட ஒருசில கட்சிகள் கூறி வருகின்றன
 
இந்த நிலையில் சமீபத்தில் புதிய அரசியல் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் அவர்கள் திராவிடம் என்ற பெயரில் கட்சி தொடங்காமல் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் ஆரம்பித்தார். இருப்பினும் அவர் திராவிடம் குறித்தும் திராவிடர்கள் குறித்தும் அவ்வப்போது புகழ்ந்து பேசி வருவார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திராவிட கட்சி தான் என்றும் தமிழ் பேசும் அனைவருமே திராவிடர்கள் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். திருச்சியில் இன்று தேர்தல் பிரசாரம் செய்த கமல்ஹாசன் திராவிடம் குறித்து கூறிய கருத்துக்கு திராவிட கட்சிகள் என்று கூறப்படும் திமுக அதிமுக மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன
 
திடீரென கமல்ஹாசன் தன்னுடைய கட்சியை திராவிட கட்சி தான் என்று கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது