1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (12:05 IST)

வீடு திரும்பிய பாரதிராஜா - நேரலில் சென்ற ஸ்டாலின்!

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவை நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 
 
இயக்குநர் நடிகர் பாரதிராஜாவுக்கு சமீபத்தில் உடல்நிலை குறைபாடு ஏற்பாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பாரதிராஜாவின் மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் தவிப்பதாக கூறப்பட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுபோன்ற தவறான தகவல்களை தயவுசெய்து பரப்ப வேண்டாம் என்றும் எங்களுடைய சொந்த பணத்தில் தான் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் தெரிவித்துள்ளார்.
 
மேலும் பாரதிராஜா தற்போது உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் ஆகி விட்டார் என்றும் அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும் அவருடைய மருத்துவச் செலவை முழுக்க முழுக்க எங்கள் குடும்பம் செய்துள்ளது என்றும் மனோஜ் பாரதி தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு சில நாட்களில் அவர் படப்பிடிப்புக்கு செல்ல தயாராக இருப்பதாகவும் மனோஜ் பாரதி கூறியுள்ளார். 
 
இந்நிலையில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா வீடு திரும்பிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து, உடல்நலம் விசாரித்தார். இச்சந்திப்பின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் உடனிருந்தனர்.