1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 6 ஜனவரி 2018 (12:46 IST)

எடப்பாடியுடன் தொலைபேசியில் உரையாடிய ஸ்டாலின்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு தொலைபேசி வாயிலாக கேட்டுக்கொண்டார். 

 
தமிழக போக்குவரத்து துறை தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். தமிழக அரசு நிறைவேற்றாததால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பனிக்கு திரும்ப வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இந்நிலையில் திமுக செயல் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தாமாக முன்வந்து தமிழக முதல்வர் எடப்பாடியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டார்.