செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (15:29 IST)

”உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழா! – தேசிய தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு தேசிய மற்றும் மாநில கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் புத்தகக் கண்காட்சியை நேற்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் தனது வாழ்க்கை அனுபவங்களை “உங்களில் ஒருவன்” என்ற சுயசரிதை புத்தகமாக வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார்.

முதல் பாகமாக வெளியாகும் “உங்களில் ஒருவன்” புத்தகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறப்பு, வாழ்க்கை, அரசியல் பயணம் என மிசா காலத்தில் சிறைவாசம் சென்றது வரை இடம்பெற உள்ளதாக கூறியுள்ளார். இந்த முதல் பாகத்தை சென்னையில் விழா நடத்தி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, சரத் பவார், பரூக் அப்துல்லா உள்ளிட்ட தேசிய, மாநில தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.