1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 6 ஜூலை 2017 (15:43 IST)

கருப்பு கண்ணாடியுடன் வந்த ஸ்டாலின்: நலம் விசாரித்த எடப்பாடி!

கருப்பு கண்ணாடியுடன் வந்த ஸ்டாலின்: நலம் விசாரித்த எடப்பாடி!

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும், ஓ.பன்னீர்செல்வமும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர் என சசிகலா சில மாதங்களுக்கு முன்னர் குற்றச்சாட்டாக வைத்தார். ஆனால் தற்போது அவரால் முதல்வராக கொண்டுவரப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியும், மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்துள்ளார்.


 
 
திமுக செயல்தலைவரும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலி கண்புரையால் பாதிக்கப்பட்டு அவருக்கு கண்ணில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் கடந்த இரண்டு நாட்கள் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.
 
இந்நிலையில் இன்று சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை வந்ததால் அந்த விவாதத்தில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் சட்டசபைக்கு வந்தார். அப்போது அவர் கருப்பு கண்ணாடி அணிந்து சபைக்கு வந்தார்.
 
மு.க.ஸ்டாலினை சபாநாயகர் சிரித்தபடி வரவேற்றார். இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டனர். பின்னர் மு.க.ஸ்டாலினிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார். அதன் பின்னர் அமைச்சர்களும் நலம் விசாரித்தனர்.