வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 8 மே 2017 (17:25 IST)

விஜயபாஸ்கரின் நண்பர் மர்ம மரணம்: அனைத்தையும் அறிந்தவர் இவர் தான்!

விஜயபாஸ்கரின் நண்பர் மர்ம மரணம்: அனைத்தையும் அறிந்தவர் இவர் தான்!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரும் அரசு ஒப்பந்தக்காரருமான சுப்பிரமணியம் என்பவர் மர்மமான முறையில் அவரது தோட்டத்தில் இறந்து கிடந்துள்ளார்.


 
 
சமீபத்தில் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தபோது அவரது நண்பர் சுப்பிரமணியனின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். இந்த சூழலில் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆர்கே நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
 
எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி, விஜயபாஸ்கரின் நண்பர் சுப்பிரமணியம் ஆகியோரது வீட்டிலும் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விஜயபாஸ்கரின் வீட்டில் இருந்து 89 கோடி ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்பட்டது.
 
மேலும் துறை ரீதியாக விஜயபாஸ்கரும், கீதா லட்சுமியும் சேர்ந்து செய்த முறைகேடுகள் பல தெரியவந்துள்ளது. ஒப்பந்த பணிகள் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை நடத்தியுள்ளனர். சுகாதார துறை தொடர்பான அனைத்து அரசு ஒப்பந்தங்களையும் பெற்று வந்தது சுப்பிரமணியம் தான்.
 
இந்த சுப்பிரமணியம் விஜயபாஸ்கரின் நிழலாக செயல்பட்டு வந்துள்ளார். இவருக்கு விஜயபாஸ்கரை பற்றி அனைத்தும் தெரியும். மருத்துவ துறையில் உள்ள ஒப்பந்தங்களை பெற்று வந்த சுப்பிரமணியம், விஜயபாஸ்கரின் கல்லூரிகள், கட்டுமான பணிகள், அவரது மனைவி ரம்யாவின் கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு துணையாக இருந்து செயல்பட்டு வந்துள்ளார்.
 
விஜயபாஸ்கர் குறித்து துறை ரீதியான முறைகேடுகளை ஒன்றுவிடாமல் விரல் நுனியில் வைத்திருந்த சுப்பிரமணியனிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தி அப்ரூவர் ஆக்கியிருந்தால் விஜயபாஸ்கரின் கதை அவ்வளவு தான் என்றாகியிருந்திருக்கும்.
 
வருமான வரித்துறை 8 அதிகாரிகள் குழுவை வைத்து சுப்பிரமணியம் வீட்டில் சோதனை மட்டுமே நடத்தியது. விசாரணை நடத்தவில்லை. அதன் முன்னரே அவர் தற்போது மர்மமான முறையில் இறந்துள்ளது வருமான வரித்துறையினருக்கு பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது. இதனால் விஜயபாஸ்கரின் பிடி லேசாக தளர்வடைந்துள்ளதாக கூறப்படுகிறது.