புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (11:20 IST)

மணிப்பூரை மறந்துவிட்டு தமிழ்நாட்டைக் குறி வைப்பது ஏன்? அமைச்சர் எ.வ.வேலு கேள்வி..!

மணிப்பூரை மறந்து விட்டு தமிழ்நாட்டை குறி வைப்பதா என அமைச்சர் அருகே எ.வ.வேலு  கேள்வி எழுப்பி உள்ளார். 
 
மத்திய அமைச்சர்களை போல் பிரதமரும் அவதூறுகளை அள்ளி வீசுவது அழகா என்ற கேள்வி எழுப்பி உள்ள அமைச்சர் எ.வ.வேலு   நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலமே பிரதமரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வர முடிந்தது என்றும் இந்தியாவில் ஜனநாயகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்தார். 
 
விவாதத்தில் ஆளும் கட்சியினர் மணிப்பூர் என்பதை விட திமுக, தமிழ்நாடு என்ற வார்த்தையை தான் அதிகம் உச்சரித்தனர். என்றும் அவர் தெரிவித்தார்.  அமைச்சர் எ.வ.வேலு  அவர்களின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran