1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified திங்கள், 13 ஜூன் 2022 (11:27 IST)

மரம் வளர்த்தா தங்க காசு பரிசு!

ஒரு வருடம் முறையாக மரத்தைப் பராமரித்து வருபவர்களுக்கு தங்க காசு பரிசளிப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 

 
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராகவும், திமுக கட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர் கலைஞர் கருணாநிதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக வயது மூப்பின் காரணமாக அவர் உயிரிழந்தார். தற்போது திமுக தமிழ்நாட்டில் ஆட்சியமைத்துள்ள நிலையில் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழாவில் முதல்வர் பல்வேறு உதவிகளையும், கலைஞர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.  
 
அமைச்சர் சேகர்பாபு, கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு 9,999 மரக்கன்றுகள் நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார். வழங்கப்பட்ட மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரித்து வருபவர்களுக்கு அடுத்த ஆண்டு கலைஞர் பிறந்த நாளில் தங்க நாணயம் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.