புலிகள் குறித்து பேசும் தகுதியுடைய ஒரே தலைவர் வைகோ: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

rajendrabalaji
Last Modified புதன், 16 அக்டோபர் 2019 (07:46 IST)
இலங்கையில் தனி நாடு காக்க போராடிய விடுதலைப்புலிகளை இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போருக்குபின் சிதறி பல நாடுகளில் வாழ்ந்து வரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சில அரசியல்வாதிகள் விடுதலைப்புலிகளை மையமாக வைத்து தங்கள் அரசியல் வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர்

விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் அரசியல் செய்து வரும் பல அரசியல்வாதிகளில் ஒருவர் தான் சீமான் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் விடுதலைப் புலிகள் குறித்தும், ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிய சீமானுக்கு தமிழகம் முழுவதிலுமிருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது
இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ’விடுதலைப் புலிகள் பற்றி பேசும் தகுதி உடைய ஒரே தலைவர் வைகோதான் என்றும், தற்போது அவர் அதிமுகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்தாலும் அவரிடம் ஒரு நியாயம் இருக்கும் என்றும், அவருடன் கூட்டணி வைத்திருந்த போது அந்த நியாயத்தை நாங்கள் உணர்ந்து கொண்டோம் என்றும், விடுதலைப் புலிகளுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் உண்மையாகவே குரல் கொடுத்தவர் அவர் ஒருவர் தான் என்றும் கூறினார்

மேலும் சீமானுக்கு விடுதலைப் புலிகள் குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்றும், சீமான் மைக் கிடைத்தால் என்ன வேணும்னாலும் பேசுவாரா? நான் பேச ஆரம்பித்தால் அவர் அவரால் தாங்க முடியாது என்றும் கூறினார் அமைச்சரின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :