1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 மார்ச் 2023 (08:05 IST)

இன்று தமிழ்நாடு வருகிறார் ஜே.பி.நட்டா.. அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்குமா?

jp nadda
பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா இன்று தமிழகம் வர இருக்கும் நிலையில் அதிமுகவின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இரு கட்சிகளின் தலைவர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். 
 
இதனால் அதிமுக கூட்டணியில் பாஜக இருக்காது என்றே கூறப்பட்ட நிலையில் திடீரென நேற்று பல்டி அடித்த அதிமுக தலைவர்கள் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று அறிவித்ததும் மர்மமாக இருந்தது. 
 
இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா என்று தமிழகம் வருகிறார். அவர் கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக அலுவலகத்தை இன்று திறந்து வைக்க உள்ளார் என்பதும் இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல் முருகன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜே பி நட்டாவின் இந்த பயணத்தின் போது அவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva