திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 9 ஜூலை 2021 (21:01 IST)

செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தபடும்: அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தபடும் என சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்  கே.ஆர். பெரியகருப்பன் பேட்டி அளித்துள்ளார்.
 
சமீபத்தில் உச்சநீதிமன்றம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத பகுதிகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது இதனை அடுத்து உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தமிழகத்தில் தொடங்கி விட்டதாக கூறப்பட்டது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது தமிழகத்தில் குறைந்து வருவதை அடுத்து தேர்தல் நடத்துவதில் தடை இருக்காது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் பேட்டியளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் இதனை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் மீண்டும் ஒரு தேர்தல் திருவிழாவை மக்கள் சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது