1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2024 (14:17 IST)

புதிய பொதுக்கழிப்பறை மற்றும் குடிநீர் குழாயை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.

மதுரையில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பள்ளிக் கல்வித்
துறை சார்பாக, யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்
நிலைப்
பள்ளியில், மாணவியர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி,பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். 
 
இதனைத் தொடர்ந்து, யா.ஒத்தக்கடை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, புதிதாக கட்டப்பட்டுள்ள ஆண் மற்றும் பெண் புதிய பொதுக் கழிப்பறைகள் மற்றும் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பயன்
பாட்டிற்கான சுத்திகரிக்கப்பட்ட குடி தண்ணீர் திறப்பு விழா நடைபெற்றது.
 
மேலும், காளிகாப்பான் அருகே உள்ள தனியார் மண்டபத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
 
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா காலநிதி, கிழக்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிமேகலை மற்றும் ஒத்தக்கடை ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.