வேதாந்தா குழுமத்திற்கு ₹80000 கோடி மானியம் வழங்கியுள்ள பாஜக அரசு - அமைச்சர் மனோ தங்கராஜ்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை டிவியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டதாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது தவறில்லை என்று அண்ணாமலை கூறியதற்கு திமுக அமைச்சர் மனோ தங்கராஜ்ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமத்திற்கு ₹80000 கோடி மானியம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் கலவரவம் வெடித்தது. இதில், அப்பாவி மக்கள் 13 பேர் தூப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்க்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, துப்பாக்கிச் சூடு சம்பவத்ததை டிவியில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது தவறில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதற்கு தமிழக தகவல்தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில், முதலமைச்சராக இருந்தவர் டிவியை பார்த்து தான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை பார்த்ததாக கூறியது சரியே என்கிறார் கார்பரேட்டுகளுக்காக மக்களை ஓடுக்கும் பாசிச பாஜகவை சார்ந்த அண்ணாமலை. ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமத்திற்கு ₹80000 கோடி மானியம் வழங்கியுள்ள பாஜக அரசு மக்களை சுட்டு கொல்வதும் மக்கள் பணத்தை கார்பரேட்டுகளுக்காக தாரை வார்ப்பதும் அவர்களின் கை வந்த கலை என்று பதிவிட்டுள்ளார்.
Edited by Sinoj