1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 16 செப்டம்பர் 2023 (16:09 IST)

தமிழகத்தில் நிஃபா வைரஸ் தாக்கம் இருக்கின்றதா? அமைச்சர் மா சுப்ரமணியன் தகவல்..!

கேரளாவில் உள்ள ஒரு சில பகுதிகளில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் நிபா வைரஸ் இதுவரை எங்கும் பரவவில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
இன்று அவர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும்  மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு பரவுவதை தடுப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  
 
திருச்சி பயிற்சி மருத்துவ மாணவி சிந்து உயிரிழந்தது பல்வேறு உபாதைகளால் என்றும் அவருக்கு டெங்கு, நிபா போன்ற வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்தார். 
 
நிபா வைரஸை பொருத்தவரை தமிழகத்தில்  இதுவரை தாக்கம் இல்லை என்றும் இருப்பினும் எல்லை மாவட்டங்களான ஆறு மாவட்டங்களில் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran