வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (18:26 IST)

இந்தி மொழியில் எம்பிபிஎஸ் படிப்பு: மருத்துவத் துறை நிபுணர்கள் கடும் எதிர்ப்பு

mbbs
இந்தி மொழியில் எம்பிபிஎஸ் படிப்பை தொடங்க மத்தியபிரதேச பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ள நிலையில் மருத்துவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் 
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் 2022 - 23 கல்வி ஆண்டில் இருந்து இந்தி மொழியில் எம்பிபிஎஸ் படிப்பை தொடங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது 
 
இதற்கு மருத்துவ துறை நிபுணர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது மருத்துவ கல்வி ஆங்கிலத்தில் மட்டுமே கற்பிக்கப்படுகிறது என்றும் நாட்டிலேயே முதல் முறையாக இந்தி மொழியில் எம்பிபிஎஸ் பாடத்தை கற்பிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்தியபிரதேசம் அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் இந்தி மொழியில் எம்பிபிஎஸ் படிப்பு உருவாக்கினால் இந்தி மாநிலங்களில் மட்டுமே அந்த மாணவர்கள் பணிபுரிய வேண்டும் பணிபுரிய முடியும் என்றும் எம்பிபிஎஸ் படிப்பை இந்தி மொழியில் படிப்பவர்கள் வேறு மாநிலத்தில் சென்று பணி புரிய முடியாது என்றும் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்