1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister Duraimurugan says about udhayanidhi

தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் உதயநிதி: அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

duraimurugan
தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் அமைச்சர் உதயநிதி என அமைச்சர் துரைமுருகன் பேசி உள்ளார். 
 
அமைச்சர்  உதயநிதி சனாதனம் குறித்து பேசியது சர்ச்சைக்கு உள்ளான நிலையில் அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன
 
அந்த வகையில் அமைச்சர் துரைமுருகன் இது குறித்து கூறிய போது தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம், இந்தியாவுக்கே எரி நட்சத்திரமாக உதயநிதி விளங்கிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார் 
 
மேலும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலினை விட உதயநிதியின் அரசியல் வீச்சு உயர்ந்து நிற்கப்போகிறது என்றும் அவர் கூறினார்.  அதற்கான காலம் வரும், அந்த காட்சியை நான் இருந்து பார்ப்பேன் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக் கட்டணம் திடீர் உயர்வு: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி