செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2017 (13:36 IST)

சைவ உணவு சாப்பிடுங்கள்: அறிவுறுத்தும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

சைவ உணவு சாப்பிடுங்கள்: அறிவுறுத்தும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

அனைவரும் ஆரோக்கியமான உடலை பெற சைவ உணவை சாப்பிடுங்கள் என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


 
 
தமிழக வனத்துறை சார்பாக சென்னையை அடுத்த கொளப்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார்.
 
அந்த நிகழ்ச்சியில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், சைவ உணவு உட்கொண்டால் தான் இளைத்த உடலை பெற முடியும். என்னைப் போன்று பெருத்த உடல் இருப்பவர்கள் சைவம் உட்கொண்டால் தான் உடல் இளைக்கும். எனவே ஆரோக்கியமான உடலை பெற அனைவரும் சைவ உணவையே உட்கொள்ளுங்கள் என தெரிவித்தார்.
 
ஏற்கனவே மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு மீது தமிழகத்தில் அதிருப்தி உள்ளது. உணவு என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட உரிமை சார்ந்த விஷயம். இந்த உணவு தான் உண்ண வேண்டும் என யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது என்ற கருத்து தமிழகத்தில் மேலோங்கியுள்ள சூழலில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சைவ உணவு சாப்பிடுங்கள் என அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடித்தக்கது.