1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (10:15 IST)

சென்னையில் நில அதிர்வு – ரிக்டர் அளவுகோலில் ?

சென்னையில் நில அதிர்வு – ரிக்டர் அளவுகோலில் ?
சென்னையில் இன்று காலை 7 மணிக்கு சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மற்றும் சென்னைக்கு வடகிழக்கில் உள்ள சிலப் பகுதிகளில் நிலத்திலும் கடலுக்களடியிலும் சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் குறித்து பயப்பட தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்துக்கு அடியில் மனிதனால் தூண்டப்பட்ட அல்லது இயற்கையாக உருவான அழுத்தத்தால் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நில அதிர்வு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி சில நிமிடங்கள் நீடித்ததாக தெரிகிறது.