வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 19 அக்டோபர் 2024 (12:52 IST)

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

assembly
தீபாவளி தினத்திற்கு மறுநாள், அதாவது நவம்பர் 1ஆம் தேதி, அரசு விடுமுறை என தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 
நவம்பர் 1ஆம் தேதியின் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நவம்பர் 9ஆம் தேதி பணி நாளாக தமிழக அரசு அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தீபாவளிக்குப் மறுநாளூம் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஏற்கனவே அரசு ஊழியர் சங்கம் நவம்பர் 1ஆம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு, தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Mahendran