1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (11:28 IST)

நமீதாவிடம் வருத்தம் தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு.. நடவடிக்கை நிச்சயம் என உறுதி..!

நடிகை நமீதா நேற்று மீனாட்சி அம்மன் கோவிலில் தனக்கு அவமதிப்பு ஏற்பட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

நடிகை நமீதா இஸ்லாமியராக இருக்கலாம் என்ற எண்ணத்தில் தான் கோவில் அதிகாரி அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார் என்றும் இது குறித்து விசாரணை செய்ய ஆணையர் உத்தரவிட்டதாகவும் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.

நமீதாவின் பதிவை நானும் பார்த்தேன், அவர் என்னிடமும் கோரிக்கை விடுத்து தான் அந்த வீடியோவை வெளியிட்டு இருந்தார், கண்டிப்பாக அவரது மனம் புண்படும் வகையில் அவமதிப்பு நடந்திருந்தால் அது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மேலும் நமீதா மனம் புண்படும்படி நேற்று அந்த சம்பவம் இருந்திருந்தால் எங்கள் சார்பில் நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Edited by Mahendran