நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?
கோடை காலமாக இருந்தாலும் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருவதை பார்த்து வருகிறோம். சில இடங்களில் கன மழை மற்றும் அதிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலம் செல்லும் மலை ரயில் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் ரத்து செய்யப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்றும் நாளையும் மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதால் முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழு கட்டணமும் திரும்பி வழங்கப்படும் என்று ரயில்வே துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு உள்ள தட்பவெப்ப நிலை அறிந்து மண் சரிவு உள்ளிட்ட தகவலை அறிந்து வருமாறும் அவ்வப்போது மாவட்ட நிர்வாகம் வெளியிடும் அறிக்கையை கவனமாக படிக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு பயணம் செய்து கொண்டிருப்பதால் மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva