1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. medical counsilling result cancel

நேற்று வெளியான மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு முடிவுகள் ரத்து!

மருத்துவம்
மருத்துவ படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அந்த முடிவுகள் ரத்து செய்யப்படுவதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிவடைந்து வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன 
 
இந்த நிலையில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அந்த முடிவுகளில் பல்வேறு குளறுபடி ஏற்பட்டால் முடிவுகளை திரும்பப் பெறுவதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது 
 
மேலும் இந்த புதிய ஒதுக்கீடு முடிவு பட்டியல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது