வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 2 ஜூன் 2015 (09:36 IST)

விஜயகாந்த் பெயரில் போலி அறிக்கை: சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு

தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் பெயரில்  போலி அறிக்கை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் போட்டியிட வில்லை என்று தகவல் வெளியானது.
 
இதனை உறுதிபடுத்தும் விதமாக, தேமுதிக லெட்டர் பேடில் விஜயகாந்த் படத்துடன் அவரது கையெழுத்தும் போடப்பட்டு வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின. இதைப் பார்த்த அக்கட்சியின் தலமைக்கழக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இது குறித்து, தேமுதிக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பன்னீர் செல்வம், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தேமுதிகவின் லெட்டர் பேடை யாரோ தவறாக பயன்படுத்தி, தேமுதிக கட்சிக்கும், அக் கட்சி தலைவர் விஜயகாந்துக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் விதத்தில் தகவல்களை பரப்பியுள்ளனர். எனவே, இவ்வாறு மோசடியான  தகவல்களை பரப்பியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.