வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2016 (23:55 IST)

மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு தகுதி இல்லை: சுப.வீரபாண்டின் கடும் தாக்கு

மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு தகுதி இல்லை: சுப.வீரபாண்டின் கடும் தாக்கு

திமுகவும்- காங்கிரசும் கூட்டணி அமைத்துள்ளன. இதனை மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு விமர்சனம் செய்து உள்ளனர். இந்தக் கூட்டணியை விமர்சனம் செய்ய மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு தகுதி இல்லை என சுப.வீரபாண்டின் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, நாககோவிலில், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
தமிழக சட்டப் பேரைவியில், 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களில் கூட 10 ல் ஒரு சதவீதம் திட்டங்கள் கூட நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 83 ஆணவ கொலைகள் நடந்துள்ளன. அதிமுக அரசு அறிவித்த எந்த திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றவில்லை.
 
தமிழக சட்ட சபை தேர்தலில், திமுகவும்- காங்கிரசும் கூட்டணி அமைத்துள்ளன. இதனை மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு விமர்சனம் செய்து உள்ளனர்.
 
தமிழகத்திலும், கேரளாவிலும் ஒரு நிலைப்பாட்டையும், மேற்கு வங்காளத்தில் இன்னொரு நிலைப்பாடும் எடுத்துள்ளனர். எனவே, அவர்களுக்கு இக்கூட்டணியை விமர்சிக்க தகுதி இல்லை என்றார்.