திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 17 ஜூன் 2024 (12:33 IST)

சாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்து செய்வோம்: மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கே பாலகிருஷ்ணன்..!

gopalakrishnan
சமீபத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் நெல்லையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் அடித்து நொறுத்தப்பட்ட நிலையில் சாதி மறுப்பு திருமணத்தை தொடர்ந்த செய்வோம் என அக்கட்சியின் கே கோபாலகிருஷ்ணன் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் இன்று அளித்த பேட்டியில் ’சாதி மறுப்பு திருமணங்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்போம், நாங்கள் யாரையும் கடத்திக் கொண்டு சென்று திருமணம் செய்து வைக்கவில்லை, எங்களை நாடி வந்தவர்களுக்கு பாதுகாப்பு அளித்து எங்கள் கடமையை செய்கிறோம்’ என்று தெரிவித்தார்.
 
மேலும் என்றைக்கும் இந்த கடமையை நாங்கள் தொடர்ந்து செய்வோம் என்றும், சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு உற்ற பாதுகாப்பு கேடயமாக மார்க்கெட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் இந்த பேட்டிக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகிறது. யாரோ பெற்ற பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க நீங்கள் யார் என்றும் சாதி மறுப்பு திருமணத்தை செய்து வைக்க நீங்கள் விரும்பினால் இருதரப்பு பெற்றோரிடமும் பேசி அவர்களுடைய சம்மதத்துடன் திருமணம் செய்து வையுங்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran