1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 28 மார்ச் 2017 (10:12 IST)

ஜெயலலிதாவை காதலிக்கும் மார்கண்டேய கட்ஜு: மீண்டும் சர்ச்சை பதிவு!

ஜெயலலிதாவை காதலிக்கும் மார்கண்டேய கட்ஜு: மீண்டும் சர்ச்சை பதிவு!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தான் ஜெயலலிதாவை ஒருதலையாக காதலிப்பதாக பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.


 
 
இந்நிலையில் மர்கண்டேய கட்ஜு மீண்டும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தான் ஜெயலலிதாவை காதலிப்பதாக பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய இளம் வயதில் ஜெயலலிதா மீது எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது.

 

 
 
ஜெயலலிதா மிகவும் அழகானவர், அவர் மீது என்றுமே மாறாத காதல் கொண்டிருந்தேன். ஆனால் இதுபற்றி ஜெயலலிதாவுக்கு தெரியாது. ஜெயலலிதா 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்தார். நான் 1946-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்தேன்.
 
2004-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க ஆளுநர் மாளிகைக்கு சென்ற போது தான் முதன் முதலாக ஜெயலலிதாவை பார்த்தேன். அவர் அப்பொழுது முதலமைச்சராக இருந்தார். அவர் அப்போது மிகவும் அழகாக இருந்தாலும் நான் அவரிடம் எனது உணர்வை வெளிப்படுத்தவில்லை என கூறியுள்ளார்.