மார்கழி மாத கிரிவலம்.. தேதி அறிவிப்பு! – திருவண்ணாமலை செல்ல சிறப்பு ரயில்கள்!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்கினி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மாதம்தோறும் பௌர்ணமியில் நடைபெறும் கிரிவலம் புகழ் வாய்ந்ததாகவும். முக்கியமாக கார்த்திகை தீபத்தை தொடர்ந்து வரும் மார்கழி பௌர்ணமி பிரசித்தி பெற்றது.
இந்நிலையில் மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கான உகந்த நாள், நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை மறுநாள் டிசம்பர் 26ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கிரிவலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 12.30 மணி அளவில் தொடங்கும் இந்த கிரிவலம் நள்ளிரவு 11.55 மணிக்கு நிறைவடையும்.
பௌர்ணமி கிரிவலத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பௌர்ணமி கிரிவலத்திற்காக திருவண்ணாமலை வரும் பக்தர்களுக்காக வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
Edit by Prasanth.K