1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 3 செப்டம்பர் 2020 (11:07 IST)

அண்ணியுடன் கள்ளக்காதலால் மனைவி தற்கொலை – அப்போதும் விடாததால் அண்ணன் எடுத்த முடிவு!

தனது மனைவியுடன் கள்ளக்காதலில் இருந்த தம்பியை அண்ணன் அடித்தே கொலைச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் லாலா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவிக்கும் தம்பி செந்திலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த செந்திலின் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஆனால் அப்போதும் அவர்கள் தங்கள் கள்ளக்காதலை விடவில்லை.

இதனால் ஒரு கட்டத்தில் கோபமடைந்த அண்ணன் பழனி இருவரையும் கண்டித்துள்ளார். அப்போதும் தொலைபேசி மூலமாக இருவரும் காதல் வளர்த்துள்ளனர்.  இதை ஒருநாள் பார்த்துவிட்ட பழனி தனது தம்பியை கம்பி மற்றும் செங்கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் பழனியைக் கைது செய்துள்ளனர்.