1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (19:48 IST)

தடை செய்தும் வேலையைக் காட்டிய டிக்டாக் – மனைவி மற்றும் மகள் இருவரும் ஓட்டம்!

டிக்டாக்கில் ஏற்பட்ட காதலால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மனைவி மற்றும் மகள் இருவரும் ஓடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஒரு செயலியாக டிக்டாக் மாறி வந்த நிலையில் அதனை இந்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் டிக்டாக்கால் பல குழப்பங்கள் நாடுகளில் உருவாகியுள்ளன. திருப்பூர், பொம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரின் மனைவி மற்றும் மகள் இருவரும் டிக்டாக்கில் அதிக ஆர்வமாக செயல்பட்டு வந்துள்ளனர்.

இருவரும் டிக்டாக் மூலம் தனித்தனி நபர்களுடன் காதல் வயப்பட்டுள்ளனர். இதையறிந்த ரவி, இருவரையும் கண்டித்துள்ளார். ரவி மீது கோபமடைந்த இருவரும், வீட்டை விட்டு மாயமாகினர். ரவி இது சம்மந்தமாக புகார் அளிக்க, போலிஸார் தேடி கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளனர். ஆனால் மீண்டும் அவர்கள் தலைமறைவு ஆகியுள்ளனர். இதனால் மனமுடைந்த ரவி, செல்போனில் வீடியோ ஒன்றை பதிவிட்டுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.