செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (11:05 IST)

மைனர்ப் பெண்ணைக் கடத்தி மூன்றாவது திருமணம் – போக்ஸோ சட்டத்தில் கைது !

மைனர்ப் பெண்ணை மயக்கி அவரை மூன்றாவதாக திரும்ணம் செய்த நபரைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாபாணி எனும் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவர் தனது இரு அத்தை மகள்களான பெண்ணரசி மற்றும் தாமரைச்செல்வி ஆகியோரை திருமனம் செய்து தனித்தனியாக குடியமர்த்தி அவர்களோடு வாழ்ந்து வருகிறார். இரண்டு மனைவிக்கு ஒருக் குழந்தை உள்ளது.

ஒவ்வொரு மனைவியின் வீட்டிலும் தலா ஒரு மாதம் என வாழ்ந்து வருகிறார். பாண்டியின் வீட்டுக்கு அருகில் அவரது அக்கா முறையுள்ள ஒருவர் தன் குடும்பத்தோடு குடியேறியுள்ளார். அவரின் மகளோடு பாண்டிக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு மைனர் பெண்ணான அவருக்கு ஆசைக் காட்டி காதலில் விழ வைத்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அந்த சிறுமி மாயமாகியுள்ளார். அதே தினத்தில் பாண்டியும் தனது இருக் குழந்தைகளோடு தலைமறையாகியுள்ளார். இதனால் பாண்டியும் அந்த பெண்ணும் சேர்ந்துதான் சென்றிருக்க வேண்டும் என சந்தேகித்த்த உறவினர்கள் போலிஸில் புகார் அளித்துள்ளனர். போலிஸார், பாண்டியின் செல்போன் எண்ணை ட்ராக் செய்து அவர் தஞ்சாவூரில் இருப்பதைக் கண்டு பிடித்துள்ளனர். அங்கு சென்று பார்த்தபோது அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொண்டு ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவரைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.