1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 2 டிசம்பர் 2016 (15:48 IST)

டாய்லெட்டுக்கு 5 ரூபாய் செக்: கையில் காசு இல்ல வேற என்ன பண்ண முடியும்!

டாய்லெட்டுக்கு 5 ரூபாய் செக்: கையில் காசு இல்ல வேற என்ன பண்ண முடியும்!

மதுரையில் பொது கழிவரை ஒன்றில் டாய்லெட்டுக்கு 5 ரூபாய்க்கு செக் கொடுத்த விநோத சம்பவம் நடந்துள்ளது. அந்த 5 ரூபாய் செக்கை போட்டோ எடுத்து இணையத்தில் போட அது தற்போது வைரலாக பரவி வருகிறது.


 
 
பழைய 500, 1000 ரூபாய் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து நாட்டில் மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் கையில் செலவுக்கு போதுமான பணம் இல்லை.
 
இந்நிலையில் ஒருவர் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி மதுரையில் உள்ள பொது கழிவரை ஒன்றுக்கு கொடுக்க கையில் காசு இல்லாததால் 5 ரூபாய்க்கு காசோலை கொடுத்துள்ளார். அது வாட்ஸ்-ஆப்பில் வைரலாக பரவி வருகிறது.