செவ்வாய், 10 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2024 (14:33 IST)

மக்கள் நீதி மய்யம் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் தேர்வு.. பொதுக்குழுவில் தீர்மானம்..!

Makkal Needhi Maiam
மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-வது பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன், கட்சியின் தலைவராக, நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் 2570 பேர், இதில் 1414 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட, கலந்து கொண்டனர். மக்களவை தேர்தலுக்கு பிறகு நடைபெறும் முதலாவது பொதுக்குழு கூட்டமாக இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு சட்டமன்றத்திலும் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 5000 உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்வதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன.

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில், ஒவ்வொரு பூத்துக்கு 5 பேர் நியமிக்கப்பட வேண்டும் என்பதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழுவில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Edited by Mahendran