ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 21 ஏப்ரல் 2024 (11:39 IST)

கூண்டோடு காலியாகிறதா கமல் கட்சி.. 3 பிரபலங்கள் விலக இருப்பதாக தகவல்..!

Makkal Needhi Maiam
உலகநாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்த போது திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக இருப்பார் என்று தான் பலர் நம்பினார்.

மேலும் அவர் கடந்த 2019 மற்றும் 2021 தேர்தலில் தனித்து போட்டியிட்டதால் அவர் மீது  நம்பிக்கை வைத்த பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்தது.

ஆனால் திடீரென 2024 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தது அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி திமுக கூட்டணியில் ஒரு தொகுதியை கூட தராமல் திமுக கூட்டணிக்காக அவர் வாக்களித்தது பெரும் முரண்பாடாக இருந்ததாகவும் விமர்சனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் மாணவர் அணி தலைவர் அந்த கட்சியில் இருந்து விலகிய நிலையில் அடுத்ததாக சில பிரபலங்கள் விலக இருப்பதாக கூறப்படுகிறது.

முதல் கட்டமாக பிரபல நடிகை ஒருவர் அந்த கட்சியில் இருந்து நிலையில் அவர் விலக போவதாகவும் அதேபோல் நடிகர் ஒருவரின் மனைவியும் அந்த கட்சியில் இருந்து விலக போவதாகவும் கூறப்படுகிறது

மேலும் சில பிரபலங்கள் அடுத்தடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலக இருப்பதால் அக்கட்சி கூண்டோடு காலியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva