திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2017 (17:21 IST)

மாஃபாவை சமாளிக்க முடியாமல் திணறும் தினகரன்!

மாஃபாவை சமாளிக்க முடியாமல் திணறும் தினகரன்!

சமீப காலமாக ஆளும் அதிமுக அரசுக்கும், அந்த கட்சியோடு தொடர்புடையோருக்கும் பல்வேறு சிக்கல்கள் வந்தவாறு உள்ளது. இதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு தான் காரணம் என அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


 
 
இரட்டை இலை சின்னம் முடக்கம், அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், எம்ஜிஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் வீடுகள் அலுவலகங்கள் என 35-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை அதனை அடுத்து ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து என அனைத்திற்கும் காரணம் மத்திய பாஜக அரசு தான் என அதிமுக சசிகலா அணியை சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் கூறிவந்தனர்.
 
இந்நிலையில் மேலும் அதிரடியாக டெல்லி போலீசார் சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகரை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க தினகரனிடம் 60 கோடி பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தினகரன் மீது வழக்கு பதிவி செய்யப்பட்டுள்ளது. இதனால் தினகரன் எந்த நேரத்திலும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் தொடர்ந்து மத்திய அரசு தினகரன் தரப்பை குறி வைத்து ஸ்கெட்ச் போட்டு நெருக்கடி கொடுப்பதற்கு காரணம் ஓபிஎஸ் அணியில் உள்ள மாஃபா பாண்டியராஜன் தான் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. மாஃபா பாண்டியராஜனுக்கு டெல்லியில் அந்த காலத்திலேயே பல தொடர்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
 
சசிகலா அணியில் மாஃபா இருக்கும் போதே டெல்லி விவகாரங்களை அவர் தான் கவணித்து வந்தாராம். அப்போதே சசிகலா அணியின் டெல்லி தொடர்புகள் அவர்களது நடவடிக்கைகள் குறித்து நன்கு அறிந்து வைத்துள்ளார் மாஃபா பாண்டியராஜன்.
 
தற்போது ஓபிஎஸ் அணியில் மாஃபா இருப்பதால் டெல்லி விவகாரங்களில் சசிகலா அணியை ஓபிஎஸ் அணி தோற்கடித்தே வருகிறது. இதற்கு காரணம் மாஃபா பாண்டியராஜன் தான். இது தினகரன், சசிகலா போன்றோருக்கு முன்னரே தெரியுமாம். இருந்தாலும் அவர்களால் மாஃபா பாண்டியராஜனின் வியூகங்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.