ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 26 மார்ச் 2020 (20:08 IST)

காதலியை சந்திக்க கொரோனா முகாமில் இருந்து தப்பிய இளைஞரால் பரபரப்பு

வெளிநாட்டிலிருந்து இந்தியாவர்களுக்காக கொரோனா முகாம் ஒன்றை ஏற்படுத்தி அதில் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா அவர்களுக்கு பரவி இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் மதுரையில் கொரோனா முகாமில் வாலிபர் ஒருவர் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அவர் முகாமிலிருந்து தப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை கண்டுபிடிக்க போலீசார் தீவிர முயற்சியில் இருந்தனர்
 
இதனிடையில் கொரோனா முகாமில் இருந்து தப்பிச் சென்ற வாலிபர் ஒரு சில மணி நேரங்களில் திரும்பி வந்துவிட்டார். அவரிடம் இதுகுறித்து விசாரித்தபோது தனது காதலியைப் பார்ப்பதற்காக முகாமில் இருந்து தப்பியதாக அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? நீ காதலியை சந்திக்க தப்பினாயா? என போலீசார் அவரை கண்டித்தனர். இதுபோன்று பொறுப்பில்லாமல் இருக்கும் ஒரு சிலரால் தான் கொரோனா நோய் மிகவேகமாக பரவுவதாக போலீசார் வருத்தத்துடன் தெரிவித்து உள்ளனர்