திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (09:00 IST)

திருட சென்ற கோவிலில் சிக்கல்; பல மணி நேரமாக போராடிய திருடன்!

மதுரையில் கோவில் ஒன்றிற்குள் புகுந்த திருடன் கதவை திறக்க முடியாமல் பல மணி நேரமாக போராடி கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ளது பேச்சியம்மன் கோவில். நேற்று இந்த கோவிலில் உள்ள மூன்று ஐம்பொன் சிலைகளும், குத்து விளக்கும் திருடு போனதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவை சோதனையிட்ட போது நேற்று முன் தினம் ஆசாமி ஒருவன் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் திருட வந்தது தெரிய வந்துள்ளது.

திருடுவதற்காக உள்ளே நுழைந்த திருடன் கதவை உடைக்க முயன்றிருக்கிறான். ஆனால் எவ்வளவு முயற்சித்தும் திறக்க முடியாததால் சோர்ந்து போன திருடன் அங்கேயே பல மணி நேரம் அமர்ந்தும், சுற்றி வந்தும் இருக்கிறான். பிறகு நீண்ட முயற்சிக்கு பிறகு பக்கவாட்டு கதவை உடைத்து சிலைகளை கொள்ளையடித்து சென்றுள்ளான்.

திருடப்பட்ட சிலைகள் மற்றும் குத்துவிளக்கின் மதிப்பு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படும் நிலையில் திருடி சென்றவரை பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.