வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 8 ஜூலை 2024 (14:13 IST)

போதை பொருள் விவகாரம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கிய -இபிஎஸ்!

பரமக்குடியில் நடைபெற உள்ள கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னையிலிருந்து இண்டிகோ விமான மூலம் மதுரை வந்தார்.
 
மதுரை விமான நிலையத்தில் அதிமுகவினர் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
 
அப்போது, அதிமுக சார்பாக தமிழகத்தில் போதைப்பொருள் விவகாரம் குறித்து, துண்டு பிரசுரம் வழங்கினார்.
 
போதைப் பொருள் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக் விவகாரம் உட்பட தமிழகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் சம்பவங்கள் குறித்தும்,Resign Stalin,Say no to drugs, Say no to DMK என்றும் துண்டு பிரசுரத்தில் இடம் பெற்று இருந்தது.