திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 16 டிசம்பர் 2020 (17:49 IST)

அதிர்ஷ்டவசமாக கிரிக்கெட்டில் நடராஜன் தேர்வாகியுள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை!

விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதிலும் அரசியலை உள்ளது என்றும் அதிர்ஷ்டவசமாக தற்போது கிரிக்கெட்டில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் தேர்வாகி உள்ளார் என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
விளையாட்டு துறையில் விளையாட்டு ஆர்வமுடைய அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்று கருத்து கூறிய மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள், புதிய வீரர்களை உருவாக்காவிட்டாலும், விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகளை முழுமையாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்கள்
 
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டு ஆர்வமுடைய அதிகாரிகளை நியமித்தல் தான் நல்ல விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும் என்றும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலற்ற நிலையிலேயே உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் 
 
விளையாட்டு வீரர்கள் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள அதிகாரிகள் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது