வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (13:04 IST)

வேலைக்கு செல்லாமல் ஒரு பைசா கூட சம்பாதிக்காத குடும்பம்.. காசு காலியானதும் தற்கொலை செய்த பரிதாபம்..!

மதுரை சேர்ந்த ஒரு குடும்பம் வாழ்நாள் முழுவதும் வேலைக்கு சென்று ஒரு பைசா கூட சம்பாதிக்காமல் கையில் இருந்த காசு காலியானதும் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் நகர்ந்து உள்ளது. ம
 
துரை சேர்ந்த பாண்டியன் என்பவர் சுகாதாரத் துறை அதிகாரியாக வேலை செய்தார். இவருக்கு வாசுகி என்ற மனைவியும் உமாதேவி, கோதண்டபாணி ஆகிய குழந்தைகளும் இருந்தனர். 
 
இந்த நிலையில் பாண்டியன் தனது மனைவி வாசுகியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். கணவர் பிரிந்தவுடன் வாசுகி தனது மகள் மகனுடன் தனியே வசித்து வந்தார்.  
 
கணவன் பிரிவால் கடும் மன உளைச்சலில் இருந்த வாசுகி மற்றும் மன உளைச்சலில் இருந்த உமாதேவி கோதண்டபாணி ஆகிய மூவரும் வேலைக்கு செல்லாமல் ஒரு பைசா கூட சம்பாதிக்காமல் இருந்தனர். 
 
இந்த நிலையில் வங்கியில் இருந்த இருப்பு, நகைகள் விற்று சில ஆண்டுகள் பொழுதை கழித்ட நிலையில் பணம் முழுவதும் காலியான நிலையில் மூவரும் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva