வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 2 நவம்பர் 2015 (00:13 IST)

தேவர் சிலை கல்வெட்டில் கருணாநிதி பெயர் மறைப்பு: திமுக குற்றச்சாட்டு

மதுரையில் முக்கிய இடத்தில் வைக்கப்பட்டுள்ள பசும்பொன் தேவர் சிலையில் திமுக தலைவர் கருணாநிதி பெயர் மறைக்கப்பட்டுள்ளதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி -பதில் அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
கேள்வி :- மதுரையில் முக்கிய இடத்தில் வைக்கப்பட்டுள்ள பசும்பொன் தேவர் சிலையை நிறுவியர் நீங்கள்தான் என்பது உலகத்திற்கே தெரியும். அந்தக் கல்வெட்டு மறைக்கப்பட்டு, ஜெயலலிதாவின் கல்வெட்டு தற்போது புதிதாக வைக்கப்பட்டுள்ளதாகவும், கேட்டால் பராமரிப்புப் பணி நடைபெறுவ தாகக் கூறுவதாகவும் சொல்கிறார்களே?
 
பதில் :- இதுபற்றி மதுரையிலே செய்தியாளர்கள் கேட்ட போது அவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை, கழகப் பொருளாளர் தளபதி, தம்பி மு.க. ஸ்டாலின் கண்டித்திருக்கிறார். முதலில் இருந்த கல்வெட்டை மாற்றியிருந்தால், “பெரிய பொறுப்பு - சிறிய புத்தி” - “போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியைக் கொடுத்தானே” என்று தான் நினைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். திமுகவின் இந்த குற்றச்சாட்டு அதிமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது.