வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2019 (18:13 IST)

இன்னும் எவ்வளவு காலம் தேவை??.. சிபிஐக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இன்னும் எவ்வளவு காலம் தேவை என சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த வருடம் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் இதுவரை 160 தொழில்நுட்பம் தொடர்பான ஆவணங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன எனவும், அதில் 100 ஆவணங்களுக்கு பதில் கிடைக்கப்பெற்று, 300 நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டுள்ளன எனவும், மேலும் துப்பாக்கிச்சூடு நாளன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் எனவும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, ஏற்கனவே வழங்கப்பட்ட காலத்தை டிசம்பர் 2018 வரை நீட்டிட்டு கால அவகாசம் வழங்கி உத்தரவேண்டும் எனவும் சிபிஐ சார்பாக சிறப்பு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் தரப்பில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், சிபிஐ தரப்பில் மீண்டும் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் தேவை? என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் வழக்கை வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதிக்க் ஒத்திவைத்தனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.